கோலாலம்பூர் – கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நிதி சட்டம் 2001-ன் கீழ் முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ கு சின் வா மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஜனவரி 8, 2014 தேதியிட்ட உறுதிமொழி அறிக்கையில் கமிஷனாகப் பெறப்பட்ட 961,500 ரிங்கிட் லாபத்தை குறிப்பிடவில்லை என்பதால், சட்டப்பிரிவு 49 (1)-ன் படி, அரசாங்க வழக்கறிஞரின் அறிக்கையை மீறியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து 2014- ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய தலைமையகத்தில் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கு சின் வா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 வருட சிறைத் தண்டனையோ அல்லது 1 மில்லியன் ரிங்கிட் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.