Home Featured நாடு முக்ரிஸ் விவகாரம்: கெடா அம்னோ தலைவர்களுடன் நஜிப் சந்திப்பு!

முக்ரிஸ் விவகாரம்: கெடா அம்னோ தலைவர்களுடன் நஜிப் சந்திப்பு!

883
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று  அம்மாநில உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்கின்றார்.

இன்று பிற்பகல் மலேசிய நேரப்படி 4.50 மணியளவில், தலைநகர் புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் உள்ள துன் ஹுசைன் ஆன் அரங்கிற்கு நஜிப் வருகை புரிந்தார்.

கெடா அம்னோவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் அங்கு கூடியிருப்பதாக ஸ்டார் இணையதளம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அந்தக் கூட்டத்தில் கெடா மந்திரி பெசார் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.