Home Featured இந்தியா சிறுவர்களை வைத்து மோடிக்கு குறி வைத்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்!

சிறுவர்களை வைத்து மோடிக்கு குறி வைத்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்!

561
0
SHARE
Ad

modi1புது டெல்லி – கடந்த குடியரசு தினவிழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தனது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, அங்கு கூடி இருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வு தான் ஐஎஸ் தீவிரவாத குழுக்களுக்கு, துருப்புச் சீட்டாக இருக்கிறது என்ற எச்சரிக்கை இந்திய உளவுத் துறையினரால் விடுக்கப்பட்டுள்ளது.

மோடியின் இந்த வழக்கத்தைக் கொண்டே ஐஎஸ் தீவிரவாதிகள், அவருக்கான குறியை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 12-15 வயதுடைய சிறுவர்களை வைத்து குடியரசு தின விழாவில், மோடியின் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் ஐஎஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவது போல் காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் இந்தியக் குடியரசு தின விழாவில் எத்தகைய அசம்பாவிதங்களும் நிகழக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி மட்டுமல்லாது பல்வேறு முக்கிய நகரங்களிலும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.