புதுடெல்லி – இந்தியாவின் 67- வது குயடிரசு தின விழா இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜ்பாத்தில், 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டே உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பிரான்ஸ் அதிபர் பங்கேற்றதையடுத்து, இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நாட்டுக்காக போராடி உயர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அசோக் சக்ரா விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் வழங்கினார்.
பின்னர், முப்படையினரின் அணிவகுப்பு தொடங்கியது. அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.
அதோடு, மாணவ மாணவியர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.