சீன நாட்டின் அடுத்த அதிபராக ஜி-ஜின்பிங்க் அறிவிக்கப்பட்டுள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
சீன மக்கள் அரசியல் விவகாரங்களுக்கான மாநாடு அண்மையில் நடந்தது அதில் அந்நாட்டில், அடுத்த அதிபராக ஜி-ஜின்பிங்க் தேர்வு செய்யப்பட்டார்.
சீனாவின் அதிபரை தேர்வு செய்யும் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் தலைவர் லீயூஷான் ஜி-ஜின்பிங்கை (59) அதிபராக முன்மொழிந்தார்.
பின்னர் நடந்த வாக்கெடுப்பில், 2,956 ஓட்டுக்களில் 2,952 ஓட்டுக்கள் ஜி-ஜின்பிங்கிற்கு ஆதரவாக பதிவானது இதையடுத்து அவர் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
Comments