Home Featured கலையுலகம் தேசிய கீதத்துடன் முதல் பதிவு – டுவிட்டரில் இணைந்தார் கமல் ஹாசன்!

தேசிய கீதத்துடன் முதல் பதிவு – டுவிட்டரில் இணைந்தார் கமல் ஹாசன்!

641
0
SHARE
Ad

kamalசென்னை – திரைத்துறையில் தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசன், ஏனோ நட்பு ஊடகங்களில் மட்டும் பாரா முகமாய் இருந்து வந்தார். இந்நிலையில், இந்தியக் குடியரசு தினவிழாவான இன்று, கமல் ஹாசன் தனது டுவிட்டர் கணக்கைத் துவங்கி உள்ளார்.

கடந்த சில நிமிடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கமல் ஹாசனின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில், முதல் பதிவே தேசியம் பற்றியதாக உள்ளது. தனது குரலில் இந்திய தேசியக் கீதத்தைப் பாடி உள்ள கமலின் அந்தப் பதிவு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.