Home Featured கலையுலகம் ஹாலிவுட் படத்தில் தனுஷ் – ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்!

ஹாலிவுட் படத்தில் தனுஷ் – ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்!

643
0
SHARE
Ad

dhanush-சென்னை – நடிகர் தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருப்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருந்து வருகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றது முதல் தொடங்கிய தனுசின் புகழ், பாலிவுட் திரை உலகில் ராஞ்சனா படத்தின் மூலம் இந்திய அளவில் வெளிச்சத்திற்கு வந்தது.

ஷமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சர்வசாதாரணமாக நடித்து கலக்கிய தனுஷ், அடுத்து என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய அறிவிப்பு ஆச்சரிய அலையை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானிய மற்றும் பிரஞ்சு இயக்குனரான மரியன் சத்ராபி, பிரபல பிரஞ்சு நாவலைத் தழுவி எடுக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபலமான அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவிருக்கிறதாம். தனுஷ் நடிக்கும் காட்சிகள் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஹாலிவுட் படம் குறித்த தகவல்களை தனுஷும் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலில், “முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குனர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அம்சங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன்” என்று அவர் தெரிவித்துள்ளார்..