Home Featured தொழில் நுட்பம் உலகம் முழுவதும் ஸ்தம்பித்த வாட்சாப் – குழம்பிப் போன பயனர்கள்!

உலகம் முழுவதும் ஸ்தம்பித்த வாட்சாப் – குழம்பிப் போன பயனர்கள்!

779
0
SHARE
Ad

whatsapp-3d-touchகோலாலம்பூர் – நட்பு ஊடகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிப்போன வாட்சாப், இன்று உலகம் முழுவதும் சில மணி நேரங்களுக்கு முடங்கிப் போனது. அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என பெரும்பாலான நாடுகளில் ஒரே நேரத்தில் வாட்சாப் முடக்கப்பட்டது, பயனர்கள் மத்தியில் சற்றே குழப்பதை ஏற்படுத்தியது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாட்சாப் முடங்கியதால், பயனர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் தங்களது கோபத்தை கொட்டித் தீர்த்துவிட்டனர். டுவிட்டரில் பல்வேறு மீமீக்களும் உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டது.

வாட்சாப்பின் இந்த முடக்கம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், வாட்சாப் இப்படி முடங்கியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.