Home Featured தமிழ் நாடு குடியரசு தினவிழாவில் வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஜெயலலிதா!

குடியரசு தினவிழாவில் வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஜெயலலிதா!

930
0
SHARE
Ad

Republic day- jayaசென்னை – இந்தியாவின் 67-வது குடியரசு தின விழா, தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் ரோசய்யா, போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். மெரினா கடற்கரையில் ஆளுநர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின்னர் ஆளுநர், முதல்வர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் அவர் வழங்கினார்.

#TamilSchoolmychoice

jaya26வீர தீரச் செயல் புரிந்ததற்காக விருது பெற்றவர்களில் அதிக கவனம் ஈர்த்தவர், பட்டதாரி இளைஞர் யூனுஸ் தான். கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது, ஊரப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணிப் பெண் சித்ராவை, படகில் சென்று பெரும் போராட்டங்களுக்குப் பிறகு மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தவர் தான் இந்த யூனுஸ். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட சித்ராவிற்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர்.

முகமது யூனுசின் இந்த தன்னலமற்ற தீரச் செயலைப் பாராட்டி, அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அண்ணா பதக்கம் வழங்கி கௌரவித்தார்.