Home Featured தமிழ் நாடு “ஒரு எம்எல்ஏ-வாக நான் தோற்றுவிட்டேன்” – பதவியைத் துறந்தார் பழ.கருப்பையா!

“ஒரு எம்எல்ஏ-வாக நான் தோற்றுவிட்டேன்” – பதவியைத் துறந்தார் பழ.கருப்பையா!

712
0
SHARE
Ad

pazha-karuசென்னை  – அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்ட நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ-வாக (சட்டமன்ற உறுப்பினராக) தொடர்வது நெறிசார்ந்த அரசியல் இல்லை என்பதால், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். இருப்பினும், சபாநாயகரை சந்திக்க முடியவில்லை. சட்டசபை செயலாளர் ஜமாலுதீனும் சந்திக்க மறுக்கிறார்.”

“அம்மாவிடம் அனுதி கேட்டு அவர் சரி என்று சொன்ன பிறகு என்னிடம் ராஜினாமா கடிதம் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும், நான் மனதளவில் இப்போதே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அதிமுக அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதால் தான் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டு வரும் நிலையில், நேற்று பிரபல வார இதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் பேட்டியில், “ஓர் ஆளும் கட்சி எம்எல்ஏ-வாக மக்களுக்குச் செய்ய நினைத்துத் தோல்வி அடைந்த கதைகள் ஆயிரம் இருக்கின்றன. சொன்னால் பக்கங்கள் போதாது. நான் மன உளைச்சலில் ராஜினாமா செய்வதைப் பற்றி, பல தடவை யோசித்திருக்கிறேன். அழுத்தம் தாங்காமல் இப்போது வெடித்துவிட்டேன்.”

“என் எம்எல்ஏ வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் பற்றி நன்கு அறிந்தவர்களிடம், சிந்தனையாளராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும் அறியப்பட்டு வந்த பழ.கருப்பையாவின் நீக்கம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.