Home Featured நாடு “அல்தான்துன்யா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை” – சைருல் கூறுகின்றார்!

“அல்தான்துன்யா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை” – சைருல் கூறுகின்றார்!

802
0
SHARE
Ad

சிட்னி – அல்தான்துன்யா கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் தூக்குத் தண்டனை எதிர்நோக்கியுள்ள சைருல் அசார் உமார், அந்தக் கொலைக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் தொடர்பில்லை என காணொளி (வீடியோ) ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

தற்போது சிட்னியில் கைது செய்யப்பட்டு, ஆஸ்திரேலிய குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சைருல் (படம்) ஒரு இணையத் தளத்தின் வழி இந்த காணொளியை வெளியிட்டுள்ளார் என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sirul - Altantuya caseஅந்த காணொளியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைகளைக் கட்டிக் கொண்டு உரையாற்றும் சைருல், “சில தரப்பினர் ஒருவரை பதவியிலிருந்து வீழ்த்தும் எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் ஒருவரை அவதூறு செய்ய எனக்குக் கற்றுத் தரப்படவில்லை. ஒருவரை அவதூறு செய்வது ஒரு பெரிய பாவமாகும். கடவுளின் பெயரால் நான் கூறுகின்றேன். மதிப்பிற்குரிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்த வழக்கில் சம்பந்தப்படவும் இல்லை அவருக்கு எந்தவித தொடர்பு இல்லை” என கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

ஏறத்தாழ 55 வினாடிகளை அந்த காணொளி கொண்டிருக்கின்றது. சைருல் வெளியிட்டிருக்கும் மூன்றாவது காணொளி இதுவாகும்.

ஆனால், நஜிப் எந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை என்பது குறித்து சைருல் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், சைருல் கூறுகிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது, அவர் கூறுவது அல்தான்துன்யா வழக்கைப் பற்றித்தான் என தொடர்புப் படுத்திக் கொள்ள வேண்டியதாகின்றது.

ஆஸ்திரேலியாவில் தடுப்புக் காவலில் இருக்கும் சைருல் இதுபோன்று அடிக்கடி காணொளிகளையும், பத்திரிக்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றார்.

இதற்கு முன் யாரையும் பெயர் குறிப்பிடாமல் அறிக்கை விடுத்துக் கொண்டிருந்த இப்போதுதான் முதன் முறையாக நஜிப்பின் பெயரைக் குறிப்பிட்டிருக்கின்றார்.