Home Featured தமிழ் நாடு பழ.கருப்பையா – வைகோ திடீர் சந்திப்பு!

பழ.கருப்பையா – வைகோ திடீர் சந்திப்பு!

645
0
SHARE
Ad

va-pazhaசென்னை – அதிமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனைப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையாவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக அரசையும், அமைச்சர்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்த பழ.கருப்பையா, அவரது வீடு தாக்கப்பட்டது முதல், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கிவிட்டார். அதிமுகவில் ஊழல் மையப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தின் மொத்த உருவமே ஜெயலலிதா தான் என்பது அவரின் சமீபத்திய விமர்சனம்.