Home Featured உலகம் ஒரு ராட்சத பறவை இனத்தை நம் இனம் தின்றே அழித்ததாம் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

ஒரு ராட்சத பறவை இனத்தை நம் இனம் தின்றே அழித்ததாம் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

857
0
SHARE
Ad

Genyornis_newtoniசிட்னி –  50,000 ஆண்டுகளுக்கு முன்பாக, 7 அடி உயரமும், கிட்டதட்ட 200 கிலோ எடையும் கொண்ட ராட்சத பறவையான ‘ஜென்யார்னிஸ்’ (Genyornis) என்ற இனத்தை, நம் மூதாதையர் வேட்டையாடி, கொன்று தின்றே அழித்து விட்டது சமீபத்தில் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் அழிந்த உயிரினங்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஜென்யார்னிஸ் நியுடொனி’ (Genyornis newton) என்ற ஒரு மிகப் பெரிய பறவை இனம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மனிதவாடை இல்லாத காலக்கட்டத்தில் பூமியில் வாழ்ந்து வந்துள்ளது. உருவத்தில் இருந்த அந்த இராட்சதத் தன்மையால் இந்தப் பறவையினால் பறக்க முடியவில்லை.

Burned-Eggsஅதன் பிறகான காலமாற்றத்தில், மனித இனம் அதிக்கம் செலுத்தத் துவங்க, அந்த இனத்தின் அழிவு காலம் ஆரம்பமாகி உள்ளது. மொத்த இனத்தையும் அதன் முட்டைகளைக் கூட மிச்சம் வைக்காமல் தின்றே அழித்து விட்டதாம் மனித இனம்.

#TamilSchoolmychoice

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஜென்யார்னிஸ் பறவையின் எச்சங்களும், தடையங்களும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளதன் மூலம் ஜென்யார்னிசின் வரலாறு தெரிய வந்துள்ளது.