Home Featured உலகம் தீவிரவாத அச்சுறுத்தலில் சிங்கப்பூர் – தற்காப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம்!

தீவிரவாத அச்சுறுத்தலில் சிங்கப்பூர் – தற்காப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம்!

644
0
SHARE
Ad

Singapore (1)சிங்கப்பூர் – தீவிரவாதமே நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சிங்கப்பூர் குடியரசு எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க, முக்கியத்துவம் வாய்ந்த அச்சுறுத்தல் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.

பாரீசிலும் ஜகார்தாவிலும் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலையடுத்து, நேற்று முன்தினம் புதன்கிழமை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு தீவிரவாதம்
தொடர்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

“உள்துறை அமைச்சு தீவிரவாதத்திடம் இருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். ஒருவேளை தீவிரவாத தாக்குதல் நடக்கும் பட்சத்தில் அதை உடனடியாக எதிர்கொள்ளத் தயார்” என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஒட்டுமொத்த குற்ற விகிதமானது குறைந்துள்ள போதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டை விட குற்ற விகிதம் சற்றே அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு இணையவழி குற்றங்களே காரணம். எனினும் இதர பெரும்பாலான குற்றங்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.