நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் தயாரிப்பில், அருண் ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய ரசிகர்களுக்காகவே ‘சயாங்கூ’ என்ற பாடல் உருவாக்கப்பட்டது.
அப்பாடல் காட்சிகளும் முழுமுழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டதோடு, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பிரிக்பீல்ட்சில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெளியீடு கண்டது.
இந்நிலையில், சாகசம் படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் பிரஷாந்த் தற்போது மலேசியாவில் உள்ளார். மலேசியாவிலுள்ள முன்னணி வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அவர் பேட்டியளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.