Home Featured கலையுலகம் மலேசிய ரசிகர்கள் முன்னிலையில் பிரஷாந்தின் ‘சாஹசம்’ பட இசை வெளியீடு கண்டது!

மலேசிய ரசிகர்கள் முன்னிலையில் பிரஷாந்தின் ‘சாஹசம்’ பட இசை வெளியீடு கண்டது!

1327
0
SHARE
Ad

EVQXqIM3naMsdAwO7n2noADxWIfI3GxwelHe8LiYOf8கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – நடிகர் இயக்குநர் தியாகராஜன் தயாரிப்பில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘சாஹசம்’.அருண் ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ANj-yotEctNlWPoTzDUbK1Fka45MVr35oR5ImmOQZR8

சாஹசம் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஆகஸ்ட் 8-ம் தேதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பிரிக்பீல்ட்சில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெளியீடு கண்டது.

#TamilSchoolmychoice

மலேசியா மற்றும் தெற்கு ஆசியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோவின், விண்மீன்எச்டி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015’ -ன் ‘ஷோகேஸ்’ நிகழ்ச்சியில், ‘சாஹசம்’ படத்தின் இசை வெளியீடும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

SP4alcgrGQ2M3JNV7-NNDPEca2dckma2dT2LzSX_S3Y

நடிகர் பிரஷாந்திற்கு மலேசியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், இப்படத்தில் இடம்பெற்ற ‘சயாங் கூ’ என்ற ஒரு பாடல் முழுக்க முழுக்க மலேசிய ரசிகர்களை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள அப்பாடலின் நடனக்காட்சிகள் மலேசிய ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

mK8VHXtvKt1XhbgcbA230pqinbiDA6hj0qEgS9SYaJU

அப்பாடல் நேற்று ரசிகர்களுக்காக மேடையில் ஒலிபரப்பப்பட்டதோடு, அப்பாடலுக்கு பிரஷாந்த் நடனமாடி தனது ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, நடிகர் நாசர், இசையமைப்பாளர் தமன், விஜய் டிவி புகழ் அறிவிப்பாளர் டிடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

– ஃபீனிக்ஸ்தாசன் 

‘சயாங் கூ’ பாடலை கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:

https://www.youtube.com/watch?v=RUqPN8UoWHM