Home கலை உலகம் பிரஷாந்தின் ‘சாஹசம்’ படத்தில் பாடல் பாடிய அனிருத்!

பிரஷாந்தின் ‘சாஹசம்’ படத்தில் பாடல் பாடிய அனிருத்!

878
0
SHARE
Ad

shaakashamசென்னை, டிசம்பர் 8 – பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்’. இப்படத்தை அருண் ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இவரது இசையில் இந்த படத்தில் லட்சுமி மேனன் ஏற்கெனவே ஒரு பாடல் பாடியுள்ளார். தற்போது, இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

‘யாரிவள் யாரிவள் என்னாச்சி, என்ற நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு அனிருத் குரல் கொடுத்துள்ளார்.  இப்படத்தில் இவர் தவிர இந்தியாவின் சிறந்த பாடகர்களான ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், மோஹித் சௌகான், அர்ஷித் சிங், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் பாடல்கள் பாடியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இப்படத்திற்காக தமன் 5 பாடல்களை அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு பிரபல நடிகை நர்கீஸ் பக்ரி, பிரஷாந்துடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

பிரஷாந்தின் அப்பாவும், இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் படத்தை தயாரிப்பதுடன், படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார்