Home நாடு சிலாங்கூர் எதிர்கட்சித் தலைவர் சம்சுதின் லியாஸ் ராஜினாமா!

சிலாங்கூர் எதிர்கட்சித் தலைவர் சம்சுதின் லியாஸ் ராஜினாமா!

481
0
SHARE
Ad

Mohd Shamsudin Liasகோலாலம்பூர், டிசம்பர் 8 – சிலாங்கூர் எதிர்கட்சித் தலைவர் டத்தோ சம்சுதின் லியாஸ் இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் பொது நிதி ஆணையத்தின் (PAC) தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அவர் கூறப்பட்டதால், அதை மறுத்ததோடு தனது பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

மேலும், இது தனது  “மரியாதை” சம்பந்தப்பட்ட முடிவு என்றும் சம்சுதின் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனது அதிகாரங்களையெல்லாம் அடங்கும் படியான அந்த பொறுப்பை ஏற்குமாறு எப்படி என்னை கேட்கலாம்? எனக்கு அதில் உடன்பாடு இல்லை” என்று சம்சுதின் கூறியுள்ளார்.

“இது எனது மரியாதை சம்பந்தப்பட்ட விவகாரம். மன்னிக்க வேண்டும். ஆனால் அதற்காக எனது கொள்கைகளை விட்டுக் கொடுக்க இயலாது. இது அம்னோவின் பாணி அல்ல” என்று சுங்கை பூரோங் சட்டமனற உறுப்பினருமான சம்சுதின் தி மலாய் மெயில் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.