Home Featured உலகம் 50 வயதிலும் இளமை மாறாத பாட்டி – இளைஞர்கள் கடும் போட்டி!

50 வயதிலும் இளமை மாறாத பாட்டி – இளைஞர்கள் கடும் போட்டி!

646
0
SHARE
Ad

Qin Ling 1பெய்ஜிங் – படத்தில் நீங்கள் பார்ப்பது சீனாவைச் சேர்ந்த சின் லிங். இப்பெண்ணிற்கு இப்போது 50 வயதாகிறது. என்ன நம்ப முடியவில்லையா? இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு பேரக் குழந்தையும் உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பெண்ணின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட நினைத்த அவரது மகள்கள் பிறந்தநாள் பரிசாக படப்பிடிப்பை ஏற்பாடு செய்தனர்.

அண்மையில், அப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட போது, அதனைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

Qin ling 550 வயதான சின் லிங் பார்ப்பதற்கு 20 வயதே ஆன இளம் பெண் போல் காணப்படுகின்றார். தனது இளமையான தோற்றத்திற்கு இவர் கூறும் காரணமோ இன்னும் வியப்பாக இருக்கின்றது.

வாரம் ஒருமுறை ஆடைகளின்றி நிர்வாணமாக உறங்குவாராம். முகத்திற்கு வெள்ளரி, தயிர், தேன் மற்றும் முத்து பொடி (Pear Powder) ஆகியவற்றைப் பயன்படுத்துவாராம்.

இந்நிலையில், இவரது அழகைப் பார்த்த 20 வயதான இணையவாசி ஒருவர், காதலில் விழுந்ததோடு, தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும், பலரும் அவரது அழகைக் கண்டு வியந்து பாராட்டி வருவதாகவும், அதில் பெரும்பாலும் இளைஞர்கள் என்றும் கூறப்படுகின்றது.

Qin ling 4ஆனால், தனக்கும் அவருக்கும் 30 வருட இடைவெளி இருப்பதால், தன்னை விட சற்று அதிக வயதான ஒருவருடன் தனது எஞ்சிய காலத்தைக் கடத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார் தனித்து வாழும் சின் லிங்.