Home Featured உலகம் நியூசிலாந்து கடற்பகுதி அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

நியூசிலாந்து கடற்பகுதி அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

663
0
SHARE
Ad

Earthquake-delhiவெலிங்டன் – நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்க எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று காலை 8.28 மணியளவில், நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவிகளின் வடமேற்கில், 219 கிலோமீட்டர் மையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மலைகளில் இருந்த வீடுகள் சரிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

எனினும், இந்த நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.