Home Featured தமிழ் நாடு சென்னை அரசு பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு கட்டணமில்லை – ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை அரசு பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு கட்டணமில்லை – ஜெயலலிதா அறிவிப்பு!

735
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் சென்னை அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமகன்கள் (Senior Citizens) கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை என்றும், அவர்கள் இலவசமாக பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா இன்று தமிழக சட்டப்பேரவியில் இன்று அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய திட்டம் படிப்படியாக மேலும் 10 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயனடைவார்கள் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் இன்று இந்த அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கான விண்ணப்பங்களை பேருந்து பனிமனைகளிலும்,மாநகர போக்குவரத்து இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் அரிவித்துள்ளார்.