Home Featured கலையுலகம் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி!

ரஜினி, கமல் கலந்து கொள்ளும் மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி!

574
0
SHARE
Ad

Vishalசென்னை – தென் இந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்கான நிதியினைத் திரட்ட மிகப் பிரம்மாண்டமான அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த நடிகர் சங்கம் ஏற்பாடு செய்து வருகின்றது.

அதில் ரஜினி, கமல் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை நடிகர் சங்க செயலாளரான நடிகர் விஷால் நேற்று வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், “நடிகர் சங்கத்திடம் 48 லட்ச ரூபாய் நிதி இருந்தது. மீதம் 2 கோடி கடன் வாங்கி, 2 கோடியே 48 லட்சம் செலவில் நடிகர் சங்கக் கட்டிட நிலத்தை மீட்டிருக்கின்றோம்.”

“தற்போது அந்த நிலத்தில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நிதி திரட்ட வரும் ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். அதில் ரஜினி, கமல் உட்பட ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.” என்று விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகள் இன்னும் சரியாக கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை என்று குற்றம்சாட்டும் விஷால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.