Home Featured தமிழ் நாடு “எனக்கு பேஸ்புக்கே கிடையாது; அது எனது கருத்து அல்ல” – அழகிரி அறிவிப்பு!

“எனக்கு பேஸ்புக்கே கிடையாது; அது எனது கருத்து அல்ல” – அழகிரி அறிவிப்பு!

664
0
SHARE
Ad

azhagiriசென்னை – திமுக குறித்து கருத்து சொல்லவும், கேள்வி கேட்கவும் தனக்கு உரிமை உள்ளது என்று அழகிரி கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகின. அந்தத் தகவலை அழகிரி தனது பேஸ்புக்கில் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்தக் கருத்தை தான் கூறவில்லை என்று மு.க.அழகிரி இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” 17.02.2016 மாலை எனது முகநூல் பக்கத்தில் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. எனக்கு முகநூல் பக்கம் கிடையாது. நான் அப்படியொரு செய்தி கொடுக்கவில்லை. இந்த செய்தியை முற்றிலும் மறுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice