Home Featured நாடு நஜிப்பின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு!

நஜிப்பின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு!

590
0
SHARE
Ad

justiceசிப்பாங் – டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தம் (TPPA) தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த 26 வயதான பெண் ஒருவர் மீது இன்று சிப்பாங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

‘ரத்து நாகா’ என்ற பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் சியாருல் இமா ரெனா அபு சமா (வயது 26) என்ற பெண், மீது மலேசிய தொலைத்தொடபு மற்றும் பல்லூடக ஆணைய சட்டத்தின் கீழ், மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்ததாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்யும் படி அவர் கூறியதால், 7000 ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.