Home Featured கலையுலகம் விக்ரமை கட்டித்தழுவி முத்தமிட்ட ரசிகர் – நெகிழ வைக்கும் காணொளி!

விக்ரமை கட்டித்தழுவி முத்தமிட்ட ரசிகர் – நெகிழ வைக்கும் காணொளி!

641
0
SHARE
Ad

Vikramகோலாலம்பூர் – அண்மையில், ஏசியானெட் தொலைகாட்சியின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சியான் விக்ரம், அங்கு தனது ரசிகர் ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது.

விழாவில் அமர்ந்திருந்த விக்ரமை நோக்கி கூட்டத்தை முந்தியடித்துக் கொண்டு ஓடிவந்த ரசிகர் ஒருவர் அவரைக் கட்டிதழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். விக்ரம் அதை இயல்பாக எடுத்துக் கொண்டாலும், அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விலக்கி அவரைப் பிடித்துத் தள்ளியுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத விக்ரம், உடனடியாக பாதுகாவலர்களை தடுத்து நிறுத்தியதோடு, அந்த ரசிகரை அருகில் அழைத்து அவருடன் தம்படம் எடுத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

விக்ரமின் இந்தச் செயலால் நெகிழ்ந்து போன அந்த ரசிகர், விக்ரமை கட்டித்தழுவி முத்தமிட்டார். அதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட விக்ரமின் செயலை பார்த்து விழாவில் இருந்த அனைவரும் ஒருநிமிடம் மெய்சிலிர்த்துவிட்டனர்.

அந்த ரசிகர் ஒரு மாற்றுத் திறனாளி என்றும் கூறப்படுகின்றது.

அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-

https://www.youtube.com/watch?v=Vrs4Jkw66xg