அம்னோ தேசியத் தலைவரின் மதிப்பை கெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் மொகிதினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என எதிர்வரும் உச்சமன்றக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப் போவதாகவும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
“அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்பதை நினைவுறுத்த வேண்டும். அவர் ஒரு கட்சியின் துணைத்தலைவர்”
“கட்சியின் அரசியலமைப்பின் படி, அவர் தலைவருக்கு உதவியாக இருக்க வேண்டும்”
“எனினும், இந்த முறை அவர் மிகவும் எல்லை மீறிப் போய்விட்டார் என நினைக்கிறேன்” என்று நஸ்ரி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், மொகிதினால் கட்சியுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால், அவர் விலக வேண்டும் என்றும் நஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.