சட்டீஸ்கர் – எதிர்வரும் 2022-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு சார்பில் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் நயா ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோடி இது குறித்து கூறுகையில், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இந்த மலிவு விலை வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கோடியே 80 லட்சம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர் என்று ஆய்வு கூறுவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அனைவருக்கும் சொந்த வீடு என்பது தான் அரசின் கனவு என்று தெரிவித்துள்ளார்.