Home Featured தொழில் நுட்பம் ப்ரீடம் 251 திறன்பேசிகளை வாங்க 7 கோடி பேர் முன்பதிவு!

ப்ரீடம் 251 திறன்பேசிகளை வாங்க 7 கோடி பேர் முன்பதிவு!

1082
0
SHARE
Ad

Freedom 251புதுடெல்லி – ரிங்கிங் பெல் நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை திறன்பேசியான ‘ப்ரீடம் 251’- ஐ வாங்க இணையதளம் மூலமாக இதுவரை 7.35 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘ப்ரீடம் 251’ போனைப் பெற இணையதளம் மூலமாக முன்பதிவுகள் தொடங்கின.

எனினும், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த இணையதளம் முடங்கியதாக பலரும் புகார் செய்யத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது மக்கள் முன்பதிவு செய்வதை தற்காலிகமாக முடக்கியுள்ள அந்நிறுவனம் வரும், ஜூன் மாதத்திற்குள் முதற்கட்டமாக 25 லட்சம் திறன்பேசிகளை விநியோகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயெல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், “குறைந்த அளவு திறன்பேசிகளே கையிருப்பில் உள்ளதால், முதற்கட்டமாக இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும் 25 லட்சம் திறன்பேசிகளை விநியோகிக்கவுள்ளோம். அதன் பின்னர் கடைகள் மூலமாக 25 லட்சம் திறன்பேசிகளை வழங்கவுள்ளோம். வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் திறன்பேசிகள் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்” என்று தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கும் பணம் அனைத்தும் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை திறன்பேசிகளை அனுப்பும் போது தான் அந்தப் பணத்தை எடுப்போம் என்றும் மோஹித் கோயெல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒவ்வொரு போனுக்கும் தங்களுக்கு 31 ரூபாய் தான் லாபம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

லக்னோ: மிகக் குறைந்த விலையில் ரூ.251 க்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்க விரும்பி,  ஆன் லைன் மூலம் 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளதாக  ரிங்கிங் பெல் நிறுவன அதிபர் மோஹித் கோயல் கூறியுள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் ஒரு புதியரக ஃபோனை  தயாரித்துள்ள ‘ரிங்கிங் பெல்’ என்ற இந்திய நிறுவனத்துக்குச்  சொந்தக்காரராக இன்று திகழும் மோஹித் கோயல் ‘ஃப்ரீடம் 251’  என்ற பெயரில் 251 ரூபாய் விலையில் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘ஃப்ரீடம் 251’ நேற்று முன்தினம் (சனி)  மாலை டெல்லியில் வெளியிடப்பட்டது. ஃப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு காலை 6 மணி முதல் http://freedom251.com/ என்ற இணையதளத்தில் தொடங்கும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

மார்க்கெட்டில் உள்ள உயர்ந்த விலை செல் ஃபோன்களுக்கு இணையாக,  பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட ஃபோனாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்மையில்  பேட்டியளித்த மோஹித்,  ” ‘ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்’ போனுக்கான முன்பதிவு தொடங்கிய 18-ம் தேதியில் இருந்து இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமானவர்கள் எங்களிடம் முன்பதிவு செய்துள்ளனர். இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில்  சில்லரை விற்பனை மூலம் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ‘ப்ரீடம் 251’  ஸ்மார்ட் போன்கள்  அனுப்பி வைக்கப்படும்.

இதற்காக, பெறப்படும் பணம் அத்தனையும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் ஃபோன்களை  டெலிவரி செய்வதற்கு முன்பாக அந்த பணத்தை நாங்கள் தொடக்கூட மாட்டோம். இந்த மாதிரியான ஃசெல்போன்களின் அடக்கவிலை சுமார் 1500 ரூபாய்வரை ஆகிறது. நாங்கள் தைவான் நாட்டில் இருந்து நேரடியாக உதிரிபாகங்களை கொள்முதல் செய்து குர்கானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அவற்றை வைத்து ஃசெல்போனை  தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்.

மேலும், ஆன்லைன் மூலம் நேரடி மார்க்கெட்டிங்கில் இறங்குவதால் இதுபோன்ற வர்த்தகங்களில் உள்ள முகவர் கமிஷன், விளம்பர செலவு, சரக்கு போக்குவரத்து செலவு போன்றவை கணிசமாகக்  குறையும். இதர நிறுவனங்களின் ஆப்ஸை எங்களது  ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்துவதால் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் கமிஷனையும் பொதுமக்களுக்கே  வழங்கும் வகையில் முடிவுசெய்துதான் 251 ரூபாய்க்கு இவற்றை விற்பதாக அறிவிப்பு வெளியிட்டோம்.

இந்த விலைக்கே விற்றாலும் எங்களுக்கு ஒரு ஃபோனுக்கு 31 ரூபாய்வரைதான்  லாபம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.