Home பொது பினாங்கு பாகான் டாலாம் பகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி – லிம் குவான் எங் முயற்சி

பினாங்கு பாகான் டாலாம் பகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி – லிம் குவான் எங் முயற்சி

1477
0
SHARE
Ad

Lim-Guan-Eng-2பட்டவொர்த், ஜனவரி 12 – பினாங்கின் பாகான் டாலாம் வட்டாரத்தில் அதிகமான இந்தியர்கள் வசிப்பதால் அங்கு புதியதொரு தமிழ்ப் பள்ளி கட்டப்பட வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் அறைகூவல் விடுத்துள்ளார்.

பாகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் இங்கு புதிய தமிழ்ப் பள்ளி கட்டுவதற்கு அனுமதி கேட்டு கல்வி அமைச்சரான டான்ஸ்ரீ மொய்தீனுக்கு கடிதமும் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்குரிய நிலத்தை ஒதுக்கித் தர மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் லிம் அறிவித்துள்ளார்.

தற்போது பாகான் தொகுதியில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி மட்டுமே இயங்கி வருகின்றது.

#TamilSchoolmychoice

பாகான் தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோதே லிம் குவான் எங் இவ்வாறு அறிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பினங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் பாகான் தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்காக அங்குள்ள இந்தியர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவதாகவும், தானும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும் இந்தப் பிரச்சனையை எழுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.