Home Featured நாடு இயந்திரக் கோளாறால் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது – காவல்துறை தகவல்!

இயந்திரக் கோளாறால் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது – காவல்துறை தகவல்!

643
0
SHARE
Ad

RMAF Aircraftகோல சிலாங்கூர் – மலேசிய விமானப்படையின் விமானம் (ஆர்எம்ஏஎப்) ஒன்று கோலா சிலாங்கூர் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியதற்கு இயந்திரக் கோளாறு தான்  காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சுபாங் விமானப் படைத் தளத்திலிருந்து இன்று காலை 8.30 மணியளவில் புறப்பட்ட இரட்டை எஞ்சின் கொண்ட விமானம், தனது வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது, எஞ்சின் பழுதானது தெரியவந்துள்ளது.

மேஜர் மொகமட் அஸ்ரி யாக்கோப் (வயது 41) தலைமையில் 8 வீரர்கள் இருந்த அவ்விமானம் தாமான் மெலாவத்தி உத்தாமா அருகே உள்ள கடற்கரையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்ட போது விமானம் தீப்பற்றிக் கொண்டுள்ளது.

அதேவேளையில், இணை விமானி மேஜர் அகமட் சியாஸ்வான் மொகமட்டுக்கு (வயது 32) இடது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

எனினும், அவ்விமானத்தில் இருந்த அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதனிடையே, மீனவர் ஒருவர் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய போது நீரில் மூழ்கிவிட்டதாக கோல சிலாங்கூர் ஓசிபிடி கண்காணிப்பாளர் ருஸ்லான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் இறங்கிய போது, அவரது கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் ருஸ்லான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மலேசிய விமானப் படையைச் சேர்ந்த் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது அவ்விமானத்தை சேற்றில் இருந்து மீட்கும் முயற்சியில் காவல்துறையும், தீயணைப்புத் துறையும் ஈடுபட்டுள்ளனர்.