Home Featured நாடு மொகிதின் இடைநீக்கம்: “அம்னோவின் முடிவை மதிக்கிறோம்” – டாக்டர் சுப்ரா!

மொகிதின் இடைநீக்கம்: “அம்னோவின் முடிவை மதிக்கிறோம்” – டாக்டர் சுப்ரா!

627
0
SHARE
Ad

subraகோலாலம்பூர் – அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை இடைநீக்கம் செய்திருக்கும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவை அதன் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மஇகா மதிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறுகையில், “அவர்கள் ஒரு முடிவெடுத்துள்ளார்கள். பாரிஷான் நேஷனலைச் சேர்ந்த இன்னொரு கட்சியின் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிடமாட்டோம். சரி என்று படும் முடிவுகளை எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு”

“எனவே அவர்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் அவர்களின் உள்கட்சி விவகாரங்கள். கட்சியின் முடிவை மஇகா மதிக்கின்றது” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.