Home Featured கலையுலகம் கே.ஜே.பாபுவின் ‘காவியம்’ இசை வெளியீடு!

கே.ஜே.பாபுவின் ‘காவியம்’ இசை வெளியீடு!

574
0
SHARE
Ad

Kaaviyamகோலாலம்பூர் – கே.ஜே.பாபு… மலேசிய இசைத்துறையில் இன்று புகழ்பெற்று விளங்கும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்.

பழகுவதற்கு மிகவும் எளியவர் என்பதோடு, எல்லோரையும் நேசிக்கும் அன்பும், அக்கறையும் கொண்டவர்.

மலேசிய இசைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வரும் கே.ஜே.பாபு, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாடகர்களான தீபன் சக்கரவர்த்தி, கார்த்திக் உள்ளிட்டோரோடு இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

‘ராகதீபம்’ என்ற இசைக்குழுவின் மூலம் மலேசியாவில் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு தனது இசையைக் கொண்டு சேர்ந்த அவர், வானொலி, தொலைக்காட்சி, ஆர்டிஎம் உள்ளிட்ட ஊடகங்களின் நிகழ்ச்சிகளுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கே.ஜே.பாபுவின் இசையில், பல மலேசியக் கலைஞர்கள் பாடியிருக்கும், ‘காவியம்’ என்ற புதிய இசை தொகுப்பு அடங்கிய குறுந்தட்டு, வரும் மார்ச் 5-ம் தேதி, தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா கந்தையா மண்டபத்தில் இரவு 7.30 மணியளவில், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் வெளியீடு காண்கிறது.

திலா லக்‌ஷ்மண், சுமதி, ஷர்மிளா சிவகுரு, தாஷாயினி, ரேவதி, கீதா குமார், ஹம்ஸ்னி பெருமாள், அன்னபூரணி, சத்யா, அசோக் குமார், சித்திரன், பாண்டியன், திருச்செல்வம், கனகசீலன், மகேன் குணபாலன், கணேசன் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் இந்த இசைத் தொகுப்பில் பாடியுள்ளனர்.

இந்த இசை தொகுப்பை, இசை உலகில் தனது முன்னோடிகளான மெல்லிசை மன்னர் அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் கே.ஜே.பாபு அறிவித்துள்ளார்.

சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் மலேசியக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை அளிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 019-2220608 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.