Home Featured கலையுலகம் அடிக்குற வெயிலுக்கு சில்லுனு ‘ஐஸ் கோசோங்’ – நாளை முதல் திரையரங்குகளில்!

அடிக்குற வெயிலுக்கு சில்லுனு ‘ஐஸ் கோசோங்’ – நாளை முதல் திரையரங்குகளில்!

1029
0
SHARE
Ad

Ais Kosongகோலாலம்பூர் – அடிக்கிற வெயிலுக்கு என்ன தான் கலர் கலரா ஜூசும், மில்க் ஷேக்கும் வாங்கிக் குடிச்சாலும் தீராத தாகம், ஒரு கிளாஸ் ‘ஐஸ் கோசோங்’ குடிச்சா போயிடுறதில்லையா? அது மாதிரி தான்..

வெவ்வேறு மொழிகளில் எத்தனையோ விதவிதமான கதைகளோடு மலேசியத் திரையரங்குகளில், புதிய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மலேசிய ரசிகர்களை சில்லிட வைக்க வருகிறது உள்ளூர் தயாரிப்பு திரைப்படமான ‘ஐஎஸ் கோசோங்’.

Ais Kosong 2மனான் சுப்ரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில், சசிகுமார், ‘வெட்டி பசங்க’ புகழ் ஆல்வின் மார்டின், சங்கபாலன், பிரதீப், அகோந்திரன், அனு, ஷாமினி, கிறிஸ்டினா, நந்தகுமார் உள்ளிட்ட மலேசியக் கலைஞர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

Ais Kosong 1ரிசால் யூசோப் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில், பிரபல ஹிப்ஹாப் பாடகர் டாக்டர் பர்ன் தனிப்பாடல் ஒன்றிக்கு இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் நாளை மார்ச் 3-ம் தேதி முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.

மேல் விபரங்களுக்கு ‘ஐஸ் கோசோங்’ பேஸ்புக் பக்கத்தில் காணலாம்: https://www.facebook.com/Ais-Kosong-399742583484118/?ref=br_rs