Home Featured கலையுலகம் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பை முடித்த தனுஷ்!

‘கொடி’ படத்தின் படப்பிடிப்பை முடித்த தனுஷ்!

681
0
SHARE
Ad

dhanushசென்னை – ‘தங்கமகன்’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

இதில் தனுஷ் முதன் முதலாக அண்ணன் – தம்பி என்று இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. பொள்ளாச்சி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

பிப்ரவரி மாத மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று தாமதமாக தற்போது படப்பிடிப்பை தனுஷ் முடித்துள்ளார். பிற நடிகர்கள் நடிக்க இருக்கும் சில காட்சிகள் மட்டுமே உள்ளன.

#TamilSchoolmychoice

அதனையும் பத்து நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் ஷாமிலி நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.