இஸ்லமாபாத், மார்ச். 15- பாகிஸ்தான் அரசியல் வரலாற்றிலேயே, ஒரு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப் படாமல் தனது ஐந்து வருட தவணையை முழுமையாக நிறைவு செய்தது இதுவே முதல் முறையாகும்.
பாகிஸ்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அடுத்த தேர்தலை மே மாதம் நடத்துவது குறித்து நேற்று தீர்மானித்தது.
இந்த சபைக்கூட்டத்துக்கு தலைவராக இருந்த சட்ட அமைச்சர் யாஸ்மின் ரகுமான், இந்த வரலாற்று வெற்றியை நமக்கு கொடுத்ததற்காக நான் அல்லாவை பிரார்த்திக்கிறேன். அடுத்த தேசிய பாராளுமன்றமும் இதை போன்றே ஜனநாயக முறைப்படி தொடரவேண்டும் என்று வேண்டினார்.
ஒரு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம், அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு மாறுவது பாகிஸ்தான் வாழ்நாள் அரசியலில் இதுவே முதல் முறையாகும்.