Home Featured நாடு “நஜிப்புக்கு எதிரான ஆதாரங்கள் அப்துல் கனியிடம் உள்ளது” – மொகிதின் தகவல்!

“நஜிப்புக்கு எதிரான ஆதாரங்கள் அப்துல் கனியிடம் உள்ளது” – மொகிதின் தகவல்!

778
0
SHARE
Ad

Najib Muhyiddinகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான ஆதாரங்கள் யாவும் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேலிடம் உள்ளதாக இன்று மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்.

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி தொடர்பான ஆதாரங்களில் ஒரு பகுதி தன்னிடம் காட்டப்பட்டதாகவும் மொகிதின் தெரிவித்துள்ளார்.

அதே தகவல்களை வைத்துக் கொண்டு தான் தற்போதைய தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி, 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து வந்த 42 மில்லியன் ரிங்கிட் ஆகியவற்றில் நஜிப்பை குற்றமற்றவர் என அறிவித்துள்ளதாகவும் மொகிதின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்னும் நிறைய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கனி தெரிவித்துள்ளார் என்று கூறும் மொகிதின், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால் மட்டுமே அவற்றை வெளியிட முடியும் என்றும் கூறியுள்ளார்.

“இந்த விவகாரத்தில் நஜிப்புக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் உள்ளதை நான் அறிவேன். ஆனால் எல்லாம் தலைமை வழக்கறிஞரின் முடிவில் தான் உள்ளது” என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மொகிதின் தெரிவித்துள்ளார்.

நஜிப்புக்கு எதிராக கனி குற்றப்பத்திரிக்கையை எழுதினாரா? என்ற கேள்விக்கு, அது பற்றி தனக்கு தெரியாது என மொகிதின் பதிலளித்துள்ளார்.