Home Featured இந்தியா நாட்டை விட்டு தப்ப முயற்சி! விஜய் மல்லைய்யா விரைவில் கைதா?

நாட்டை விட்டு தப்ப முயற்சி! விஜய் மல்லைய்யா விரைவில் கைதா?

657
0
SHARE
Ad

Vijay-Mallya-e1448292596255புதுடெல்லி – கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லைய்யாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. விஜய் மல்லையா வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் குறித்து, இந்திய கடன் வசூலிப்பு முகமையிடம் பாரத ஸ்டேட் வங்கி முறையிட்டுள்ளது.

அத்துடன் விஜய் மல்லைய்யாவிடம் இருந்து ரூ. 7 ஆயிரம் கோடியை வசூலிக்கும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 நிறுவனங்கள் 7 ஆயிரம் கோடி வரை கடன் அளித்திருந்தன. பஞ்சாப் நேஷனல் , கனரா  , பரோடா வங்கி ஆகியவையும் விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் அளித்த பிற வங்கிகள். ஆனால் கிங் ஃபிஷர் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது.

#TamilSchoolmychoice

விஜய் மல்லைய்யாவின் நிர்வாக கோளாறுகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி விஜய் மல்லையாவை ‘வேண்டுமென்றே தவறிழைத்தவர் ‘ என்று அறிவித்தது.

அதே போல் யுனைடெட் புருவரீஸ் ஹோல்டிங் நிறுவனமும்  அதன் தலைவருமான விஜய் மல்லைய்யாவும் செயல்படாத கிங்ஃபிஷர் நிறுவனமும் ‘வேண்டுமென்றே தவறிழைத்தவர்’ பட்டியலில் சேர்ப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருந்தது.

இதற்கிடையே கடந்த வாரம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்திய பிரிட்டனை சேர்ந்த  டியாஜியோ நிறுவனம்,  விஜய் மல்லைய்யாவுக்கு ரூ. 515 கோடி கொடுத்து, அவரை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வைத்து விட்டது. இதையடுத்து லண்டனில் விஜய் மல்லையா செட்டில் ஆகப் போவதாக சொல்லப்படுகிறது.

நாட்டில் இருந்து விஜய் மல்லைய்யா தப்பி ஓடிவிடக் கூடாது என்பதால், எஸ்.பி.ஐ. விரைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அவரை கைது செய்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் எஸ்.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.