Home Featured நாடு “மொகிதினால் சங்கப்பதிவகத்தில் முறையிட முடியாது” – அட்னான் விளக்கம்!

“மொகிதினால் சங்கப்பதிவகத்தில் முறையிட முடியாது” – அட்னான் விளக்கம்!

709
0
SHARE
Ad

adnanகோலாலம்பூர் – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது அம்னோ துணைத்தலைவர் பதவி இடைநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்திலோ அல்லது சங்கப் பதிவிலாகாவிடமோ முறையிட முடியாது என அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்துள்ளார்.

சங்கப் பதிவிலாகா சட்டம் 1966, பிரிவு 18 சி-ன் கீழ், கட்சி விவகாரங்கள் மற்றும் முடிவுகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது என்றும், சங்கப் பதிவிலாகா சட்டப்பிரிவு 16 -ன் படி, சர்ச்சைகள் தீர்வு காணப்படவில்லை என்றால் கட்சியின் பதிவை இரத்து செய்ய மட்டுமே சங்கப்பதிவிலாகாவிற்கு அதிகாரம் உள்ளது என்றும் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், மொகிதினின் இடைநீக்கம் இதில் சேராது என்று அட்னான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மொகிதின் இந்த விவகாரம் குறித்து முறையில் கட்சியைத் தவிர வேறு இடம் இல்லை என்றும் அட்னான் தெரிவித்துள்ளார்.

அம்னோ உச்ச மன்றம் கட்சியின் ‘நடப்பு மற்றும் எஞ்சிய அதிகாரங்களை’ மறு ஆய்வு செய்து மொகிதினை இடைநீக்கம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ள அட்னான், இந்த இடைநீக்கம் கட்சி அரசியலமைப்பு சட்டவிதி 9.12-ன் கீழ் செய்யப்படவில்லை என்றும், சட்டவிதி 10.15-ன் கீழ் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து விமர்சித்து வந்த முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை, கடந்த வாரம் அம்னோ துணைத் தலைவர் பதவியில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்தது அம்னோ உச்ச மன்றம்.

இது குறித்து இன்று வியாழக்கிழமை காலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் அம்னோ துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், தான் தொடர்ந்து அம்னோவில் நீடிக்கப் போவதாக அறிவித்தார்.

அதே வேளையில், தான் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது அம்னோவின் அமைப்பு சட்டவிதிகளுக்கு ஏற்ப செய்யப்படவில்லை எனத் தான் கருதுவதால், இது குறித்து விளக்கம் கேட்க சங்கப் பதிவகத்தைத் தான் அணுகவிருப்பதாகவும் மொகிதின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.