Home Featured கலையுலகம் விஜய் சேதுபதியின் ”காதலும் கடந்து போகும்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ”காதலும் கடந்து போகும்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

532
0
SHARE
Ad

kaadalum kadanthu poogumசென்னை – இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஆளான விஜய் சேதுபதியின் ’காதலும் கடந்து போகும்’ படத்தின் முன்னோட்டம் நேற்று சூர்யா அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டர்.

இதுவரை 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலா பரவியுள்ளது இந்த முன்னோட்டம். விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபஸ்டியன் காதல் மற்றும் நகைச்சுவை வசனங்கள் முன்னோட்டத்தை இன்னொருமுறை பார்க்கத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியாது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி நடிப்பில் மார்ச் 11-ஆம் தேதி வெளியாக உள்ள படம் ’காதலும் கடந்து போகும்’.

#TamilSchoolmychoice

படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை வெளியானது. ’பிரேமம்’ படத்தின் நடித்த மடோனா செபஸ்டியன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.