Home Featured இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட்: நான்காவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: நான்காவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

547
0
SHARE
Ad

indian deamமிர்புர் – ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி20 தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது.

இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் 3 தோல்வி கண்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற அரபு எமிரேட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 10.1 ஓவரில் 82 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையில் 4-ஆவது வெற்றியை பெற்றது. இதையடுத்து வரும் 6 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.