மிர்புர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் நகரில் நடைபெற்ற ஆசியா கிண்ணம் டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளில் வங்காளதேசத்தை வெற்றி கொண்டு கிண்ணத்தை ஆறாவது முறையாகக் கைப்பற்றியது.
கடும் மழை காரணமாக, ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதால், ஆட்ட இலக்கு, 20 ஓவர்களிலிருந்து, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் இந்தியா பந்து வீசத் தொடங்கியது. 15 ஓவர்கள் முடிந்தபோது, வங்காளதேசம் 120 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் இந்தியா 13.5 ஓட்டங்களுக்குள்ளாக 122 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வெற்றி கொண்டது.
வெற்றிக் களிப்பில் தம்படம் (செல்பி) எடுத்துக் கொள்ளும் இந்திய அணியினர்….
இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடலோரத்தில் மணலில் செதுக்கி வாழ்த்து வரைந்த கிரிக்கெட் இரசிகர் ஒருவரின் வடிவமைப்பை டுவிட்டரில் சுதர்சன் பட்நாயக் என்பவர் பதிவிட்டு மகிழ்ந்தார் (நன்றி: டுவிட்டர்)