Home Featured உலகம் இன்று தொடங்குகிறது உலக கோப்பை டி20 கிரிக்கெட்!

இன்று தொடங்குகிறது உலக கோப்பை டி20 கிரிக்கெட்!

664
0
SHARE
Ad

icc-world-twenty20-2016-liveநாக்பூர் – 16 அணிகள் பங்கேற்கும் 6-ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர், முதல் சுற்று மற்றும் சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன.

ஏ’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும். 15-ஆம் தேதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில்தான் பிரதான அணிகள் நுழைய உள்ளன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த இரு பிரிவுகளில் இருந்தும் தலா 2 அணிகள் என மொத்தம், 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில், இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும்.

மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது. இன்று நாக்பூரில் நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் ஹாங்காங்-ஜிம்பாப்வே பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியிலும், ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியிலும் மோத உள்ளன.

15-ஆம் தேதிக்கு பிறகுதான் உலக கோப்பை களைகட்ட ஆரம்பிக்கும் என்பது ரசிகர்கள் கருத்து. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பு மண்ணின் மைந்தர்களான இந்திய அணிக்கே உள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.