Home Featured உலகம் பாலியல் உறவால் ‘ஜிக்கா’ வைரஸ் பரவுகிறதா? ஆய்வை தொடங்கியது நியூசிலாந்து!

பாலியல் உறவால் ‘ஜிக்கா’ வைரஸ் பரவுகிறதா? ஆய்வை தொடங்கியது நியூசிலாந்து!

542
0
SHARE
Ad

Zika virus longநியூசிலாந்து – நியூசிலாந்தில் இந்தாண்டு 71 பேருக்கு ‘ஜிக்கா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிக்கா வைரஸ் பாலியல் உறவின் வழியாக ஆணிடமிருந்து, அவரது மனைவிக்கு செல்வது குறித்து நியூசிலாந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி டான் மேக்கீ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” நியூசிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளார். அவருக்கு ‘ஜிக்கா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நபருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவரது துணைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பெண்ணிற்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு வழியே வைரஸ் பரவி இருக்ககூடும் என்ற வகையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

மேலும் அந்த ஆணின் துணி பையில் கொசு ஒன்று நுழைந்து அது அந்த பெண்ணை கடித்து இருக்க கூடும் என்ற அடிப்படையிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.