Home Featured தமிழ் நாடு தமிழருவி மணியத்துடன் அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜின் புதிய கூட்டணி!

தமிழருவி மணியத்துடன் அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜின் புதிய கூட்டணி!

766
0
SHARE
Ad

tamilaruvi_manian2_2312620hசென்னை – காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மற்றும் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜின் புதியக்கட்சி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க உள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அப்துல் கலாம் இந்திய மக்கள் கட்சி என்னும் கட்சியை சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார்.

தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்துடன் இணைந்து அப்துல் கலாம் இந்திய மக்கள் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பான அறிவிப்பை தமிழருவி மணியனும், பொன்ராஜும் இன்று வெளியிட உள்ளனர். இந்த இரு கட்சிகள் மட்டுமன்றி மாணவர்கள் அமைப்பினரும் இந்த புதியக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர் என்று தமிழருவி மணியன் கூறி யுள்ளது குறிப்பிடத்தக்கது.