ஜசெக, அமனா மற்றும் பிகேஆருடன் இணைந்து டாக்டர் மகாதீர் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கையின் வலிமையை சோதித்துப் பார்க்க இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை தயாராக இருப்பதாகவும் கைரி குறிப்பிட்டுள்ளார்.
“டாக்டர் மகாதீர் உட்பட சக கட்சியினர் அனைவருக்கும் தெரியும். அரசாங்கத்திற்கு தலைமையேற்க ஒரு தனிநபரை வெறும் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் பிரகடனத்தில் கையெழுத்திடுவது மூலமாக நிர்ணயித்துவிட முடியாது. அவர்கள் அதிருப்தியடைந்திருந்தால், ஒன்றாக இணைந்து அதிகாரப்பூர்வமாக வரும் தேர்தலில் பாரிசானை எதிர்த்து நிற்கட்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கின்றோம்” என்று எப்எம்டி இணையதளத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் கைரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்க, மகாதீர் மொகமட் நேற்று எதிர்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.