Home Featured கலையுலகம் சூர்யாவின் ’24’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சூர்யாவின் ’24’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

654
0
SHARE
Ad

suriya_24_1722016_mசென்னை – ரசிகர்கள் நீண்ட மாதங்களாக ஆவலுடன் கத்துக் கொண்டிருந்த சூர்யாவின் ‘24’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியது. 3 விதமான தோற்றம், நடை, உடை, பாவனை என்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார் சூர்யா.

வயதான சூர்யாவிற்கு நித்யா மேனனும், அழகான சூர்யாவிற்கு சமந்தாவும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருக்கிறார். ஒரு வாட்சை தேடி வில்லன் சூர்யா வருவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

’24’ என்று பெயர் வைத்திருப்பதால் முன்னோட்டம் முழுவதும் நம்பர்களின் ராஜ்ஜியத்தால் நிரம்பி வழிகிறது. ‘ஒரே கருவறையில் உதித்தோம், ஓரிரு நொடிகளில் ஜனித்தோம் ஒரே உருக்கொண்டோம்’ என்று வித்தியாசமான பேச்சால் வில்லன் ஆத்ரேயா கவர்கிறார்.

#TamilSchoolmychoice

சூர்யா மற்றும் படக்குழுவின் நீண்ட நாள் உழைப்பிற்கு தனது பின்னணி இசையால் பெரும்பலம் சேர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். மொத்தத்தில் 1 நிமிடம் கொண்ட இந்த முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. குறிப்பாக வில்லன் ஆத்ரேயா தங்களை மிகவும் கவர்ந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

ஆத்ரேயா அதிரும் என்று இறுதியாக முன்னோட்டத்தில் 2016 கோடை விடுமுறைக்கு ‘24’ படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் ‘24’ முன்னோட்டம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.