Home Featured இந்தியா கார் விபத்தில் இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி! சொற்ப காயங்களுடன் தப்பினார்!

கார் விபத்தில் இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி! சொற்ப காயங்களுடன் தப்பினார்!

821
0
SHARE
Ad

Smirthi Iraniமதுரா – பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (படம்) சென்ற கார் விபத்துக்குள்ளானதில் சொற்ப காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

மத்திய அமைச்சரான ஸ்மிரிதி இரானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் காரில் டெல்லி புறப்பட்டு உள்ளார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்மிரிதி இரானியின் கார், முன்னாள் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது மோதியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,

#TamilSchoolmychoice

ஸ்மிரிதி இரானி சேலான காயங்களுடன் உயிர்தப்பினார். அவருடைய இடது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது என்றும் இருப்பினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

விபத்தை அடுத்து ஸ்மிரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள செய்தியில், “நான் நலமாக உள்ளேன். எனக்காக கவலை அடைந்தவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Smriti Irani-twitter-accident

அமைச்சர் ஸ்மிரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில், தான் நலமாக இருப்பதாகவும் வாகன விபத்து குறித்தும் வெளியிட்ட செய்திகள்.