Home Featured தமிழ் நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கணவர் காலமானார்!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கணவர் காலமானார்!

1047
0
SHARE
Ad

சென்னை: காங்கிரஸ் கட்சியில் அண்மையக் காலமாக சினிமாப் பின்னணி கொண்ட குஷ்பு, நக்மா போன்ற பெண் அரசியல்வாதிகள் கலக்கிக் கொண்டிருக்க அவர்களுக்கு இணையாக, சினிமா, அரசியல் குடும்பம் என்பது போன்ற எந்தவிதப் பின்னணியும் இல்லாமல், தனது அதிரடி அறிவிப்புகளால், பேச்சுகளால் காங்கிரசில் தனக்கென ஓர்அடையாளத்தைப் பிடித்தவர் விஜயதாரணி (படம்).

Vijayatharani-Congress MLAஆனால் அவருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அணியினருக்கும் ஏற்பட்ட பிணக்கால், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜயதாரணிக்கு சில நாட்களுக்கு முன்னால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் பதவி தேடி வந்தது.

சட்டமன்ற உறுப்பினரான, விஜயதாரணிக்கு, அகில இந்திய காங்கிரஸ் மகளிர் பொதுச் செயலாளர் பதவி சில நாட்களுக்கு  முன்னர்தான் வழங்கப்பட்டது. ஆனால், அதன் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு முன்பே, எதிர்பாராத சோகம் அவரைத் தாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

புதுடில்லி சென்று தனக்கு பதவி வழங்கப்பட்டதற்கு மேலிடத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்னை திரும்புவதற்குள்ளாக, அவரது கணவர், சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி, (வயது 51) ஒரு வழக்கறிஞராவார்.

சென்னை, மயிலாப்பூர் சி.ஐ.டி., காலனியில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிற்பகல், 3. 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் இறந்த தகவலறிந்த விஜயதாரணி, டில்லியிலிருந்து உடனடியாக சென்னை திரும்பினார். புதிய பதவி கிடைத்த மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்பே கணவரை இழந்த சோகம் அவரைத் தாக்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார் விஜயதாரணி.