Home Featured தமிழ் நாடு மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் சர்ச்சை ராணி விஜயதரணி!

மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் சர்ச்சை ராணி விஜயதரணி!

725
0
SHARE
Ad

சென்னை – அண்மையில் சில மாதங்களாக தகவல் ஊடகங்களில்  அதிகம் அடிபட்ட பெயர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணியின் பெயர்தான்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து முதலில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அவர், பின்னர் டில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையின் தலையீட்டால் கட்சியில் தொடர்ந்து நீடித்தார்.

Vijayatharani-Congress MLAவிளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரான அவருக்கு தற்போது மீண்டும் அதே தொகுதி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக விளவங்கோடு தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி (படம்) மீண்டும் போட்டியிடுகிறார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான விஜயதரணி ஏற்கனவே தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்திருக்கிறார். அப்போது, அவருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து விஜயதரணி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார்.

விஜயதரணி அப்போது டெல்லி சென்று, தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் பேசினார். இதேபோல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் டெல்லி சென்று சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தான், கடந்த மார்ச் மாதம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதரணி நியமிக்கப்பட்டார்.

ஆனால், விஜயதரணி போட்டியிடுவதற்கு உள்ளூரல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இது  ஈடுபட்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விஜயதரணி 5 ஆண்டுகளாக தொகுதிக்கு வரவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.