Home Featured உலகம் ஈராக்கில் கார் குண்டு வெடித்து 47 பேர் பலி! 47 பேர் படுகாயம்!

ஈராக்கில் கார் குண்டு வெடித்து 47 பேர் பலி! 47 பேர் படுகாயம்!

705
0
SHARE
Ad

Daily_News_1332927942277ஹில்லா – ஈராக்கின் ஹில்லா நகருக்கு வடக்கில் வாகன சோதனை மையம் ஒன்று உள்ளது. அங்கு, வாகன சோதனைக்காக நூற்றுக்கணக்கான வாகனங்கள் நேற்று  அணிவகுத்து நின்றன.  அப்போது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட காரை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.

இந்த கொடூரமான தற்கொலைப்படை தாக்குதலில் 47  பேர் பலியாயினர். படுகாயமடைந்த 47 பேர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அதில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.